இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க: HARI HARAYE NAMAḤ KṚṢṆA
நாம-ஸங்கீர்தந நரோத்தம தாஸ Ṭஹாகுர இயற்றியது; ஶ்ரீ பபஜி மொழிபெயர்த்தது
(1)
ஹரி ஹரயே நமஃ கிருஷ்ண யாதவாய நமஃ யாதவாய மாதவாய கேஶவாய நமஃ
ஓ ஹரி, உங்களுக்கு என் வணக்கம்! ஓ கிருஷ்ண, யதுகுலத்தில் பிறந்த உங்களுக்கு என் வணக்கம். யாதவ, மாதவ, கேஶவ என்று அறியப்படும் கிருஷ்ண-வுக்கு என் வணக்கம்.
(2)
கோபால கோவிந்த ராம ஶ்ரீ-மதுஸூதந கிரிதாரீ கோபீநாத மதந-மோஹந
ஓ கோபால, கோவிந்த, ராம, ஶ்ரீ மதுஸூதந, கிரிதாரீ, கோபீநாத, மதந-மோஹந!
(3)
ஶ்ரீ-சைதந்ய-நித்யாநந்த ஶ்ரீ-அத்வைத-ஸீதா ஹரி குரு வைஷ்ணவ பாகவத கீதா
ஶ்ரீ சைதந்ய, நித்யாநந்த, ஶ்ரீ அத்வைத, ஸீதா ஆகியோருக்கு வெற்றி. ஹரி, குரு, வைஷ்ணவர்கள், ஶ்ரீமத் பாகவத, மற்றும் பகவத் கீதா -வுக்கும் வெற்றி.
(4)
ஶ்ரீ-ரூப ஸநாதந பட்ட-ரகுநாத ஶ்ரீ-ஜீவ கோபால-பட்ட தாஸ-ரகுநாத
ஶ்ரீ ரூப, ஸநாதந, ரகுநாத பட்ட, ஶ்ரீ ஜீவ, கோபால பட்ட, தாஸ ரகுநாத ஆகியோருக்கு வெற்றி.
(5)
ஏஇ சய கோஸாஈர கரி சரண வந்தந யாஹா ஹோஇதே விக்ந-நாஶ அபீஷ்ட-பூரண
இந்த ஆறு கோஸ்வாமீ-களின் பாதங்களுக்கு என் வணக்கம். அவர்களை வணங்குவதால் பக்தியின் எல்லாத் தடைகளும் அழிந்து எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன.
(6)
ஏஇ சய கோஸாஇ யார முஇ தார தாஸ தா-ஸபார பத-ரேணு மோர பஞ்ச-க்ராஸ
இந்த ஆறு கோஸ்வாமீ-களுக்குச் சேவை செய்பவருக்கு நான் அடிமை. அவர்களின் தாமரைப் பாத தூசியே என் ஐந்து வகை உணவு.
(7)
தாம்தேர சரண-ஸேவி-பக்த-ஸநே வாஸ ஜநமே ஜநமே ஹோய ஏஇ அபிலாஷ
பிறவிதோறும் இந்த ஆறு கோஸ்வாமீ-களின் தாமரைப் பாதங்களுக்குச் சேவை செய்யும் பக்தர்களுடன் நான் வாழ்வேனாக!
(8)
ஏஇ சய கோஸாஇ யபே வ்ரஜே கைலா வாஸ ராதா-கிருஷ்ண-நித்ய-லீலா கரிலா ப்ரகாஶ
இந்த ஆறு கோஸ்வாமீ-கள் வ்ரஜ-வில் வாழ்ந்தபோது ராதா-வும் கிருஷ்ண-வும் தம் நித்திய லீலைகளை நிகழ்த்திய இடங்களை வெளிப்படுத்தினர்.
(9)
ஆநந்தே போலோ ஹரி பஜ விருந்தாவந ஶ்ரீ-குரு-வைஷ்ணவ-பதே மஜாஇயா மந
ஆனந்தத்துடன் ஹரி நாமத்தை உச்சரி, விருந்தாவந-வை வழிபடு. ஶ்ரீ குரு, வைஷ்ணவர்களின் பாதங்களில் மனத்தை நிலைநிறுத்து.
(10)
ஶ்ரீ-குரு-வைஷ்ணவ-பத-பத்ம கரி ஆஶ நாம-ஸங்கீர்தந கஹே நரோத்தம தாஸ
ஶ்ரீ குரு, வைஷ்ணவர்களின் தாமரைப் பாதங்களுக்குச் சேவை செய்ய விரும்பி நரோத்தம தாஸ ஶ்ரீ ஹரி-யின் புனித நாமங்களின் இந்த ஸங்கீர்தந -த்தைப் பாடுகிறார்.
1 thought on “நாம சங்கீர்த்தனம்: ஹரி ஹரயே நமஃ கிருஷ்ண”